வாரணாசி கங்கை நதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடினர்.
வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் கங்கை நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கையும் பொருட்படுத்தாமல் அங்கு குவிந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.