தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார், தமிழருக்கு வாக்களித்த தருமருக்குப் பாராட்டுக்கள் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது என்றும் வேலூர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்ததற்குக் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.