மதுரையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சிம்மக்கல், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
மேலும், கனமழை காரணமாக ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டு தெரு பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தண்ணீரில் மூழ்கியதால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்தனர்.
கோரிப்பாளையம் – தல்லாகுளம் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.