உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, வாரணாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
முக்கிய பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் அனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், வாரணாசிக்கு கார் மூலம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.