டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து முறையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டறியப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக திறமையான அரசு என நிரூபித்துள்ளது என்றும், திமுக ஊழலில் திறமையான அரசு என நிரூபித்துள்ளதாகவும் சாடினார்.
கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டில் திமுக அரசு ரூ.5.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் கூறினார்.
மக்களை ஏமாற்றும் திமுக அரசு, வீடு வீடாக சென்று ஆட்களை கெஞ்சி சேர்ப்பதாகவும் இபிஎஸ் கூறினார்.