புதுச்சேரியில் நாய் கடித்ததில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட, வலிதாங்க முடியாமல் சிறுமி அலறிய காட்சி வெளியாகி உள்ளது.
புதுச்சேரியின் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள நடைபாதையில் சிறுமி ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த தெரு நாய், சிறுமியின் கையை கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் நாயை விரட்டினர்.
இதையடுத்துச் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அவர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.