பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஒன்றரை வாரத்திற்கு முன்பு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அரசுமுறைப் பயணமாக சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுமார் ஒருமணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நீடித்தது.
இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சசிதரூர், அமெரிக்க வரி விதிப்பு, எல்லைப் பதற்றம் உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் சீனப் பயணம் மற்றும் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ஆழ்ந்த ஒற்றுமையின் தவிர்க்க முடியாத வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்.