பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அவ்வப்போது அசம்பாவிதம் தொடர்ந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்கிறார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன. பிரதமர் வருகையை ஒட்டி இம்பாலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி ராஜீவ் சிங் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.