முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பரப்புரையில் பேசிய அவர், அமெரிக்காவின் வரிவிதிப்பால் பின்னலாடை தொழில் 50% நலிவடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
தொழிலாளர்களின் வேலையிழப்பை தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடினார்.
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 40 நாட்களாக குப்பைகளை எடுக்காமல் சுகாதர சீர்கேடு அடைந்துள்ளதாகவும், . தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.