அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவை சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் உள்ள மோட்டலில் மேலாளராக வேலைச் செய்து வந்தார். அவருக்கும் சக ஊழியரான கோபோஸ் மார்டினெஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த கோபோஸ், கத்தியுடன் நாகமல்லையாவை துரத்தி துரத்தி தாக்கத் தொடங்கினார். அலறல் சத்தம் கேட்டுச் சந்திர நாகமல்லையாவின் மனைவி, மகன் ஆகிய இருவரும் அவரை தடுக்க முயன்றனர்.
அப்போது இருவரையும் தாக்கிவிட்டு அவர்களின் கண்முன்பே நாகமல்லையாவின் தலையைக் கோபோஸ் துண்டித்துக் கொலைச் செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, கோபோஸ் மார்டினெஸைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கொலையாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளிவந்துள்ளன.
கொலையாளி மார்டினெஸ், கியூபா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதும் தெரியவந்தது.
மேலும், குற்றவாளி மீது பாலியல் தொல்லை, வாகனத் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்நாட்டுக் குடியேற்றத்துறை அதிகாரிகள், கொலையாளி மார்டினெஸிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.