எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி அரசியல் செய்வதைத் திமுக கைவிட வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துத் திருத்தணியில் அவர் அளித்த பேட்டியில்,
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் ஆம்புலன்ஸை அனுப்பி அரசியல் செய்கிறது திமுக என்றும் ஆம்புலன்ஸை அனுப்பி அரசியல் செய்வதை திமுக கைவிட வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.
மக்களைப் பற்றி சிந்திக்காமல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும் என்றும் 4 ஆண்டுகள் எதுவும் செய்யாததால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கூட்டம் அலைமோதுகிறது என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.