ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அந்நாடு மீது மேலும் தடை விதிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுக்கு 50 முதல் 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்தினால், அந்நாடு மீது மேலும் தடை விதிக்க முடியும் என்றும், எனது திட்டத்தை பின்பற்றினால் உக்ரைனில் விரைவாகப் போர் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.