இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டைத் தமிழக அரசு ஒருங்கிணைத்துக் கொண்டாடுவது என்பது, அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா என்றும் இசைகளின் வேறுபாடுகளை, தனது இசையின் மூலம் ஒன்றாக்கியவர் இளையராஜா என்று ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டார்.
இளையராஜாவின் சிம்பொனி, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் ஊக்கமளிக்கும் என்றும் இளையராஜாவைப் பார்த்து வளர்ந்தவன் நான் என்பதில் மகிழ்ச்சி என்று கூறிய ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவைக் கொண்டாடுவதென்பது அனைத்து இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.