சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த அபுதாகீர், தங்க நகை வியாபாரியாவார். கடந்த 12-ம் தேதியன்று, இவரது நண்பர் ஆரிஸ் தனியார் ஆம்னி பேருந்தில் கொடுத்து அனுப்பிய 52 சவரன் நகைத் திருடுபோனது.
இதுகுறித்துப் புகாரளிக்கப்பட்ட நிலையில், திருமலைவாசன் என்ற தனியார் ஆம்னி பேருந்தின் நடத்துநர் மகேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கொள்ளை சம்பவத்திற்கு வழக்கறிஞர் சிவபெருமாள் மூளையாகச் செயல்பட்டதும், மேலும் 4 பேருடன் சேர்ந்து நகையைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்து நடத்துநர் மகேஷைக் கைது செய்தனர்.