பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான வழக்கின் முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படைப் போலீசார், அவரை அடித்து துன்புறுத்தியதில் மரணம் அடைந்தார்.
இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில், வழக்கைச் சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்தநிலையில் நகைத் திருட்டு தொடர்பான நிகதாவின் புகாரையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து மடப்புரம் கோயில் வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள், நிகிதா நகைத் திருட்டு வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிகிதாவின் காரை ஓட்டி சென்றதாகக் கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாரை வரவழைத்துச் சிபிஐ அதிகாரிகள் விசாரனையைத் தொடங்கி உள்ளனர்.