வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி பாதுகாப்பதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் புர்னியாவில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரண்டு பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையடுத்துப் புர்னியா விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும் கங்கை நதியின் குறுக்கே நேரடி ரயில் இணைப்பை வழங்கும் 2 ஆயிரத்து 170 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிக்ரம்ஷிலா – கட்டாரியா இடையேயான ரயில் பாதைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினர்.
இதேபோல் 4 ஆயிரத்து 410 கோடி மதிப்புள்ள அராரியா – கல்காலியா இடையேயான புதிய ரயில் பாதையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.