சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவிரைவாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை முகமது வாசிம் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் மோதின.
இதில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஐக்கிய அரபு அமீரகம் அணியின் கேப்டன் முகமது வாசிம் 54 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம், 83 டி20 போட்டிகளில் 37 புள்ளி ஏழு ஒன்று சராசரி, 154 புள்ளி எட்டு எட்டு ஸ்ட்ரைக் ரேட்டில் 3 ஆயிரம் ரன்களை வாசிம் கடந்தார்.
இதனால் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவிரைவாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை முகமது வாசிம் படைத்துள்ளார்.