உத்தரகாண்ட மாநிலம் டேராடூனில் டிராக்டரில் ஆற்றைக் கடக்க முயன்ற 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட மாநிலத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
குறிப்பாக டேராடூன் நகரம் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, டான்ஸ் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட, அதனை டிராக்டரில் கடக்க முயன்ற 10 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆற்றைக் கடந்தபோது பாதி வழியில் மாட்டி கொண்டவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு, கரையில் இருந்தவர்களிடம் உதவி கேட்க, தீடீரென அவர்களை வெள்ளம் அடித்து சென்ற அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது.