ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவாவதாக இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ஜெர்மனியில் வசித்து வரும் பயல் – கௌரவ் என்ற இந்திய தம்பதி, தங்கள் வாழ்வியலை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அப்படி அவர்கள் வெளியிட்ட வீடியோ தான் தற்போது விவாதமாக உருவெடுத்துள்ளது. மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவாவதாக வீடியோ வெளியிட்டுள்ள இந்திய தம்பதி, அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் வீட்டு வாடகைக்கே சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மின்கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய், பெட்ரோலுக்கு 21 ஆயிரம் ரூபாய், வீட்டு சாமான்களுக்கு 62 ஆயிரம் ரூபாய் என அவர்கள் கூறும் செலவு பட்டியல் கிறுகிறுக்க வைக்கிறது.
சமையல் தவிர்த்து இதர செலவாக 41 ஆயிரம் ரூபாய், ஜிம் செலவாக 8 ஆயிரம் ரூபாய் எனச் செலவினம் நீண்டு கொண்டே செல்கிறது.
இதில் பயண செலவினங்கள் சேர்க்கப்படாமல் இருக்க, அதையும் சேர்த்து விட்டால் நிலைமை என்னவாகும் என யோசித்துப் பாருங்கள் என இந்திய தம்பதி எழுப்பிய கேள்வி விவாதமாக மாறியுள்ளது.