உலக ஓசோன் தினத்தையொட்டி திருச்சி தனியார் கல்லூரி சார்பில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திருச்சி சீதாலட்சுமி கல்லூரி சார்பில் ஓசோன் படலத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.