திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையைத் தமிழக அரசு வழங்காததால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாயினர்.
செங்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகையானது, கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை.
இதனால் மாணவர்களின் பெற்றோரிடம் கட்டணம் செலுத்தக்கோரி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசிடம் இருந்து தொகை வரும் வரை கட்டணத்தை செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாக மாணவர்களின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் புகாரளித்த பெற்றோர், கல்வி கட்டணத்திற்கான தொகையை அரசு ஒதுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.