சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னையில் , 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் 3 வாகனங்களில் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் சௌகார்பேட்டையில் நகை வியாபாரி மோகன் லால் காத்ரி என்பவருடைய வீட்டிலும், புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய மற்றொரு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையானது வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சோதனை ஓரிரு நாட்கள் நடைபெறலாம் எனவும் இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் எனவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.