இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை அவதூறாகப் பேசியதற்கு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முகமது யூசுப், ஆசிய கோப்பையில் இந்தியா கைகுலுக்காமல் சென்றது குறித்து பேசினார்.
அப்போது, சூர்யகுமார் யாதவை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார். தொகுப்பாளர் முகமது யூசுப்பிற்கு அறிவுறுத்தியும், அவர் வேண்டுமென்றே அந்த வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தினார்.
இருப்பினும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முகமது யூசுப் மறுத்துவிட்டார். இதனால் இந்திய மக்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.