பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது கடந்த 12ஆம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் குழுவை சேர்ந்த ரவிந்திரா மற்றும் அருண் என்பது போலீசாருக்குத் தெரியவந்தது.
இந்நிலையில் காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் சுற்றிவளைத்தனர்.
அப்போது, போலீசாரை நோக்கி இருவரும் துப்பாக்கியால் சுட்டதால், போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில், படுகாயமடைந்த ரவிந்திரா, அருண் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.