திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இட ஒதுக்கீட்டுக்குப் போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்குப் பாமக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1987 ம் ஆண்டு கல்வி இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தரப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி மார்க்கெட் முதல் ஆரணி கூட்ரோடு வரை மெளன ஊர்வலம் சென்றனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.