பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயரதிகாரிகளுக்கு அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் சீருடையில் பங்கேற்று உரிய மரியாதை செலுத்துமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு அசிம் முனீர் உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-முகமுது அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் டெல்லி, மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான சதித் திட்டம் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டதாகவும் பயங்கரவாதி மசூத் இலியாஸ் தெரிவித்துள்ளார்.