கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வேலைக்குப் போக வேண்டாம் எனக்கூறிய கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லால்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ஸ்ரீதிவ்யபாரதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கண்ணனின் மனைவி ஸ்ரீதிவ்யபாரதி அருகே உள்ள ரைஸ் மில்லுக்கு வேலைக்குச் செல்வதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிக்கு செல்ல வேண்டாம் எனக்கூறி தகராறில் ஈடுபட்ட கணவர் மீது ஸ்ரீதிவ்யபாரதி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.
கண்ணனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பான புகாரின்பேரில் மனைவி ஸ்ரீதிவ்யபாரதியைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.