தவெக பிரச்சாரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பிரச்சாரப் பயணத்திற்கு எந்தப் பாரபட்சமும் இன்றி அனுமதி வழங்க வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் விசாரணையில் ஆஜரான காவல்துறைத் தரப்பு திருச்சி பிரச்சாரத்தின்போது தவெகத் தொண்டர்கள் ஆபத்தான முறையில் பங்கேற்றது குறித்த புகைப்படங்களைத் தாக்கல் செய்தது.
அவற்றை பார்வையிட்ட நீதிபதி, கட்சியின் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பிரச்சாரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி,
இழப்பீடு வசூலிக்கப்படவில்லை என்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி
பொதுச்சொத்துகள் சேதமானால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக டெபாசிட் பெறும் வகையில் விதிமுறைகளை வகுத்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.