கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நள்ளிரவில் பெய்த கனமழையால், சாலைகளெங்கும் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.
பெங்களூருவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியது. பெங்களூரு நகரத்தில் 24 மணி நேரத்தில் 65.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்தைக் கடுமையாக பாதித்தது.
இதன் காரணமாக வேலைக்குச் செல்வபவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், பெங்களூருவுக்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.