நடிகர் விஜய் உரிய தரவுகள் எதுவும் இல்லாமல் பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, அக்டோபர் 11 ஆம் தேதி மதுரையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக தெரிவித்தார். அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்க்கு கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு நேரடி போட்டி என் சொல்ல முடியாது என தெரிவித்தார். “விஜய் உரிய தரவுகள் எதுவும் இல்லாமல் பேசி வருவதாகவும் அவர் சாடினார்.