விரைவில் நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா - நடிகர்கள் பற்றி அவதூறு பரப்புவதா? : Youtuber-களுக்கு எச்சரிக்கை!
Sep 23, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

விரைவில் நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா – நடிகர்கள் பற்றி அவதூறு பரப்புவதா? : Youtuber-களுக்கு எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீண்ட காலமாக நடைபெற்று வந்த நடிகர்  சங்க கட்டடம் விரைவில் திறக்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ள அதன் நிர்வாகிகள், இதன் மூலம் மிகப் பெரிய வருமானம் ஈட்டப்பட்டு, அதனைக் கொண்டு நடிகர்  சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அண்மையில் மறைந்த நடிகர்கள் சரோஜா தேவி, ராஜேஷ், டெல்லிக் கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நட்சத்திரங்களுக்குச் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகப் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, தற்போது உள்ள சங்கத்தின் கடன், அடுத்து வரும் நிர்வாகிகளுக்குச் சுமையாக இல்லாத அளவுக்கு, பெரும் வருவாய் ஈட்டும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக எதிரெதிர் அணியாக இருந்த நடிகர் சங்கம் தற்போது ஓரணியாக ஒருங்கிணைந்து விட்டதாக விஷால் குறிப்பிட்டார். நடிகர், நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பதிவிடும் Youtuber-கள் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கையை முன்னெடுக்குமா என்ற கேள்விக்கும் விஷால் பதிலளித்தார்.

நடிகர் விஜயின் அரசியல் பயணம் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்த போது, நடிகர் சங்கம் பற்றிய விவகாரங்களுக்கு மட்டுமே பதிலளிப்போம் என்று கூறிய விஷால் நாசூக்காக விடைபெற்றார்.

Tags: நாசர்கார்த்திவிஷால்Actors' Association building opening ceremony soon - Spreading slander about actors? : Warning to Youtubersநடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Related News

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி – கைதான இலங்கை பெண் வாக்குமூலம்!

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு சிறை தண்டனை நீட்டிப்பு!

கணவரை கொலை செய்தவர்களை மன்னிக்கிறேன் – சார்லி கிரிக் மனைவி உருக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பினராயி விஜயனின் பிரமாணப்பத்திரம் – உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஹெச்1பி விசா கட்டணத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்களிக்க வாய்ப்பு என தகவல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!

அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies