செயற்கைக்கோள்களை பாதுகாக்க மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் வெற்றிக்குச் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றின. முன்னதாகக் கடந்த 2024ம் ஆண்டு இந்திய செயற்கைக்கோளும் அண்டை நாட்டின் செயற்கைக்கோளும் நெருக்கமாகச் சென்றன. நல்வாய்ப்பாக இரண்டு செயற்கைக்கோள்களும் மோதவில்லை.
இந்நிலையில் செயற்கைக்கோள்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் வகையில் Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்க இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 50 கண்காணிப்பு செயற்கைக் கோள்களை நிலைநிறுத்த 270 பில்லியன் ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அடுத்தாண்டு Bodyguard செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் எனவும் கூறப்படுகிறது.