எதிர்காலத்தில் நாட்டில் சுயசார்பு கொள்கையை பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியுடன் தொடங்கி அடுத்த ஆண்டு தசரா வரை தொடரும் என்றார்.
இது எங்கள் பயணத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்தியாவை காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவித்து, தன்னம்பிக்கை கொண்ட, சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதற்கான ஒரு நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்,
1995 முதல் ஆர்எஸ்எஸ் ஆண்டுதோறும் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய விஜயதசமி உத்சவத்தின் தொடக்க நிகழ்வாக அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார், மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்துவார். கடந்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் (தன்னார்வலர்கள்) முழு சீருடையில் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு வருகை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் அம்பேகர் கூறினார்.
முன்னாள் ராணுவத் தளபதி ராணா பிரதாப் கலிதா, டெக்கான் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் கே.வி. கார்த்திக், பஜாஜ் ஃபின்சர்வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புனே சஞ்சீவ் பஜாஜ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
உலகளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே அனைவரின் விரும்பம் எனக்கூறிய அவர், இந்தியாவின் இலக்கு வெற்றிபெற ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கடமைகளை செய்யும் எனவும் தெரிவித்தார்.
மேலும், குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறையின் சித்தாந்தத்தின் மையம் என்ற விழிப்புணர்வை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்ற இந்தியா, காலனித்துவ மனப்பான்மையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்றார்.
காலனித்துவ செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த இது ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.