நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார்.
இதனிடையே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களுடைய பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர். அப்போது நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.