தமிழகத்தின் கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துவிட்டது - நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தின் கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு.

கௌரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் 8,000 ஆக உயர்த்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. “பிச்சை புகினும் கற்கை நன்றே” எனக் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு போதித்த நமது தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் அரசு சிதைத்து விட்டது என்பதைத்தான் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதை விட்டுவிட்டு. கௌரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்தி தற்காலிகமாகத் தப்பிக்கப் பார்க்கும் திமுக அரசின் அலட்சியத்தால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் பாழாக வேண்டுமா? அதிலும் UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு. மீண்டும் மீண்டும் அரசு கல்லூரிகளில் அவர்களைப் பணியமர்த்துவது ஏன்? இது மிகப்பெரும் உழைப்புச் சுரண்டலல்லவா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சியில் குடிநீர், கழிவறை. தங்கும் விடுதி. உணவு. போதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், பேருந்து வசதி என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி செயலிழந்து கிடக்கும் அரசு கல்லூரிகளைப் போதிய பேராசிரியர்களின்றி முற்றிலுமாக முடக்கப் பார்க்கிறதா ஆளும் அரசு? இதனால் தான் மாணவர் சேர்க்கைக்கான கால அளவை பல மாதங்கள் நீட்டித்த பிறகும் கூட தமிழக மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதில்லை. இது முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி.

அரசு சேவைகளை நம்பியிருக்கும் அத்தனை பேரும் ஏழை, எளிய மக்கள் தானே என்ற இளக்காரத்தில் தங்கள் இஷ்டத்திற்கு படிக்கும் பிள்ளைகளையும் படித்த பட்டதாரிகளையும் ஆட்டிப் படைக்கும் திமுக அரசின், அராஜக நிர்வாகத்திற்குக் கூடிய விரைவில் நாம் முடிவு கட்ட வேண்டும். இல்லையேல் எஞ்சியிருக்கும் பெருமைகளையும் இழந்து நமது தமிழகம் நிர்கதியாகிவிடும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: trn BJPbjpnewsDMKtn politicalThe ruling DMK government has destroyed the education system of Tamil Nadu from all angles - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா!

Next Post

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies