ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றுள்ளார். தொடர்ந்து பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3 வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களை சுரண்டி, ஊழல் மற்றும் முறைகேட்டால் காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில், வினாத்தாள் கசிவின் மையமாக ராஜஸ்தான் இருந்ததாக குற்றம் சாட்டிய அவர், ஜல்ஜீவன் திட்டம், ஊழல் காரணமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததுடன், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.