ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டம் அந்தர்வேதி அருகே கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
குறிப்பாகச் சுனாமிக்கான அபாயம் இருக்கும்போது கடல் இது போன்று உள்வாங்குவதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் பின்னோக்கி சென்றதால், கடல்பரப்பு முழுவதும் சேறாகக் காட்சியளிக்கிறது.
எனவே, பொதுமக்கள் கடலை விட்டு வெளியேறியதால், அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.