கள்ளச்சாராய மரணங்களுக்குக் கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? என முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் உங்கள் கட்சிக் காரர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்களே அதுதான் நீங்கள் கூறும் அவதூறா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் பற்றி மக்கள் பேசுவதுதான் வதந்தியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே அதுதான் பொறுப்புடன் நடந்து கொள்வதா, அல்லது, உங்கள் மகன், சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே அதுதான் பொறுப்புடன் நடந்து கொள்வதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் யாரும் எந்த அரசியலும் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர், உங்களின் வீடியோ தான், சந்தேகங்களை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.