வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியதால் தவெக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செய்யக்கோரி மாணவர் சங்கம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதனால் தவெக மற்றும் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் முன்னிலையிலேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் தவெக நிர்வாகிகள் திமுகவினரை கைது செய்யக்கோரி ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்குச் சென்ற போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில் தவெகவினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.