தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு, கேரள அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 4ம் தேதி மாலை 5 மணிக்கு மோகன்லாலுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. மலையாள சினிமாவிற்கும், கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது எனக்கூறிய கேரள அமைச்சர் சாஜி செரியன், நிகழ்ச்சியில் மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.