டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தலைநகர் டெல்லியில் தீன் தயாள் உபாத்யா பகுதியில் புதிய பாஜக அலுவலகத்தைக் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதனையடுத்து மாநில பாஜக புதிய கட்டடத்தைப் பிரதமர் மோடி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்ட பாரத மாதா உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.