26/11 தாக்குதலுக்குப் பதிலடியாகப் போரை தொடங்க வேண்டாமென அமெரிக்கா கூறியதாகத் தெரிவித்த ப. சிதம்பரத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 175 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது உறுதியானது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாகிஸ்தானுக்கு ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
26/11 தாக்குதலின்போது போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விமர்சித்துள்ள மத்திய நுகர்வோர் விவகாரத்தறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, வெளிநாட்டு அதிகாரத்தில் 26/11 தாக்குதலின்போது அரசு தவறாகக் கையாண்டது தொடர்பாக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரிந்ததை, 17 வருடங்களுக்குப் பிறகு ப.சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.