கொலம்பியாவில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவத்துள்ளார்.
கொலம்பியா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள இஐஏ பல்கலைகழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஜனநாயகம் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதே இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என தெரிவித்தார்.
பாரம்பரியம், மதம் மற்றும் கொள்கைகளுக்கு உரிய இடத்தை உருவாக்குவதே ஜனநாயக அமைப்பு. ஆனால், இந்தியாவில் அதன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போது பிரதமரையும் நாட்டையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்தார்.
இது ஒரு நல்ல தலைவருக்கு அழகல்ல என்றும் சாடினார். ராகுல் காந்தி தனது கருத்துக்களை இந்தியாவில் பேசலாம் என்றும், அயல்நாடுகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.