இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவை அவமானப்படுத்துவதை பிரதமர் மோடி ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவை எப்போதும் ரஷ்யா மதிப்பதாகவும், உலகின் பொளாதார வளர்ச்சியில் இருநாடுளின் பங்களிப்பு அளப்பறியது என்றும் புதின் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றால், அதிபர் ட்ரம்ப் நிச்சயம் ஏமாற்றம் அடைவார் என்றும் புதின் கூறியுள்ளார்.