அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே கலிபோர்னியாவின் எல்.செகுண்டோவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் திடீரெனப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் வெளியேறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.