சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதேபோல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.