2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரசுடன் ஆட்சியை சுவைத்த திமுகவுக்கு கட்சத்தீவு குறித்து ஞாபகம் வரவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கட்சத்தீவு குறித்து கேள்வியெழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்,இந்த விவகாரத்தில் பாஜகவினர் பலமுறை பதிலளித்த பிறகும், முதல்வர் அதே பல்லவியை பாடிக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு யாரும் செய்யத் துணியாத துரோகத்தை திமுகவும், காங்கிரசும் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளதுடன், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், கரூரில் சொந்த மக்களை பாதுகாக்க முடியாத ஒரு முதல்வர், மணிப்பூர் பிரச்னை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.