மகாராஷ்டிராவில் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசாரும், ராணுவ வீரரும் பிடித்த காட்சிகளை வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேசத்தின் தானே அடுத்து கல்யாண் பகுதியில் உள்ள அம்பர்நாத் ரயில் நிலையம் பரபரப்பாகக் காணப்பட்டது.
அப்போது ரயிலுக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவியின் செயினை பறித்த நபர் திடீரெனத் தண்டவாளத்தில் குதித்து தப்பிக்க முயன்றார்.
அப்போது நடைமேடையில் நின்றிருந்த ராணுவ வீரரும், ரயில்வே போலீசாரும் துரிதமாகச் செயல்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடித்தனர்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் ராணுவ வீரருக்கும், ரயில்வே போலீசாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.