உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டிக்காக அவர் டேராடூன் சென்றுள்ளார்.
அப்போது டேராடூன் விமானநிலையத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் அங்கிருந்த செய்தியாளர் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அவர், நாங்கள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் எனவும் உண்மை விரைவில் வெளியே வரும் என்றும் தெரிவித்தார்.