கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் அரசு தேவையில்லாமல் யாரையும் கைது செய்யாது என்றும், ஆதாரங்கள் இருந்தால் அரசு தனது கடமையை செய்யும் என்றும் தெரிவித்தார்.
பொதுவாக ஒரு கட்சி ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பது தெரியும், அதற்கு ஏற்ற இடங்களை சம்பந்தப்பட்ட கட்சிகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக்கூறிய அமைச்சர் துரைமுருகன், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு திமுக எந்தவகையிலும் பொறுப்பேற்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு வழங்கியதிலிருந்து அனுமதி, நிபந்தனை, ஆலோசனை என அனைத்தையும் தாங்கள் சரியாகவே செய்துள்ளதாகவும், தாங்கள் இந்த விவகாரத்தில் எப்படி பொறுப்பாகிறோம் எனத் தெரியவில்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.